Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இன்று 28 மாவட்டங்களில் மழை இருக்கு - எங்கெல்லாம்? லிஸ்ட் இதோ

இன்று 28 மாவட்டங்களில் மழை இருக்கு - எங்கெல்லாம்? லிஸ்ட் இதோ

இன்று தமிழகத்தின் திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அடுத்த 3 மணிநேரத்துக்கு 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

லட்சத்தீவின் வடக்குப் பகுதிகள் மற்றும் அதையொட்டியப் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. முதல் 3.1 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சியிலிருந்து, கேரளா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இன்று தமிழகத்தின் திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, தென்காசி, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

நாளை (அக்.18) நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கோவை, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
White House lists $330.5 billion investments in US from India
அடுத்த செய்தி
ரூ.100 கோடி போதைப்பொருள் பறிமுதல்: தவெக நிர்வாகி உட்பட 4 பேர் சிக்கியது எப்படி?

தொடர்புடைய செய்திகள்